கலெக்டர் அலுவலகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருப்பூர், பிப். 18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் எடுத்துக்கொண்டனர்.

இதில், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) பண்டாரிநாதன், உதவி ஆணையர் (கலால்) செல்வி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு) பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதுபோல் மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக தென்னம்பாளையம் வரை சென்றனர்.பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: