திருப்பூர், பிப். 18: திருப்பூர் மாநகர பகுதி முழுவதும் வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முருகம்பாளையத்தில் சந்தேகப்படும் விதமாக தங்கியிருந்த, மூன்று பேரிடம் விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் கான்ஜன் அலி (27), முகமது மொனிருல் இஸ்லம் (35), மற்றும் மிலோன் (30), மூன்று பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது.
மூன்று பேரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல் நல்லூர் செவந்தாம்பாளையத்தில் ஆலம்கீர் சர்தார் (28), அரீப்மியா (45), இருவரும் முறைகேடாக தங்கியிருந்தது தெரிந்தது. 5 பேரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்தும், போலியான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது appeared first on Dinakaran.