×

ஒன்றிய அமைச்சரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்து வரும் நிலையில், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வடசென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் புதிய கல்வி கொள்கையை ஏற்க்கவில்லை என்றால் ரூ.2152 கோடி நிதி தரமாட்டோம் என்று கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்தும், காவி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த துடிக்கும் பாஜ அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

The post ஒன்றிய அமைச்சரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Perambur ,Union government ,Vyasarpadi ,Dr. ,Ambedkar Government Arts and Science College ,Union ,Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மக்களிடம் ஒன்றிய அமைச்சர்...