×

சார்ஜ் போட்டபோது 2 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து எரிந்து நாசம்

அண்ணாநகர்: சார்ஜ் போட்டபோது 2 எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (33). தனியார் பள்ளி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது 2 எலக்ட்ரிக் பைக்குகளை சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சார்ஜ் வெடிக்கும் சத்தம் கேட்டு, தினேஷ் திடுக்கிட்டு எழுந்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த 2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 பைக்குகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

The post சார்ஜ் போட்டபோது 2 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Dinesh ,Thirumangalam ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு காய்கறி பூ, பழம், உணவு தானிய...