- கஞ்சி
- கலெக்டர்
- ஆதித்ரிவிதா
- மனாய் பட்டா
- கஞ்சி திருவிடிபல்லா
- காஞ்சிபுரம்
- 28வது வார்டு
- காஞ்சிபுரம் நகராட்சி
- திருவிடிப்பள்ளம்
- அத்திராவிதா
- ஆதித்ரவித்
- பட்டா
- காஞ்சி கலெக்டர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 28வது வார்டு திருவீதிப்பள்ளம், ஆதிதிராவிட பகுதியில், 4 தலைமுறைகளாக 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், மற்ற தெருகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள், அந்த பகுதியில் வசிப்பதற்கான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் அட்டை, மாநகராட்சிக்கு உரிய வரி செலுத்தியும் பட்டா இல்லாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 10ம்தேதி ஆட்சேபனையற்ற இடங்களுக்கு பட்டா வழங்கலாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், திருவீதிப்பள்ளம் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட செயலாளர் மதி.ஆதவன் தலைமையில், அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மனு அளித்தனர்.
இம்மனுவை பெற்றுகொண்ட கலெக்டர், மனுவினை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நிகழ்வின்போது, கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், நகர செயலாளர் பாலாஜி, நகர பொருளாளர் வினோத்குமார், வாலாஜாபாத் நகர செயலாளர் அசோக்குமார், தொண்டரணி ஜேம்ஸ், விசிக வட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பகுதி மக்களும் உடனிருந்தனர்.
The post காஞ்சி திருவீதிப்பள்ளத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காஞ்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.