×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சார்பில் ரூ.6.65 கோடியில் புதிய திருமண மண்டபம் அமைக்க அடிக்கல்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சார்பில் ரூ.6.65 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் இராஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது, கோயில் நிர்வாகத்தின் தரப்பில் நெம்மேலி சாலையில் திருமண மண்டபம், தங்கும் விடுதி, இலவச தங்கும் கூடம் ஆகியவை கட்டப்பட்டு, கோயில் பராமரிப்பில் உள்ளது.

இந்நிலையில், திருப்போரூர் பகுதியில் ெதாடர்ச்சியாக சுபமுகூர்த்த நாட்களில் திருமணங்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்னொரு புதிய திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. போதிய வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியுடன் நகருக்கு வெளியே திருமண மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய இடையன்குப்பம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 25 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, புதிய திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல் வரவேற்றார். இதில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் இராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.6 கோடியே 65 லட்சம் செலவில் புதிய திருமண மண்டபம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், துணை தலைவர் பரிமளா யுவராஜ், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கந்தசுவாமி கோயில் மேலாளர் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சார்பில் ரூ.6.65 கோடியில் புதிய திருமண மண்டபம் அமைக்க அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Foundation stone ,Thiruporur Kandaswamy Temple ,Thiruporur ,Joint Commissioner ,Hindu ,Endowments ,Kumaradurai ,Assistant Commissioner ,Rajalakshmi ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்