- சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம்
- சிந்தாதிரிப்பேட்டை
- ரிச்சி தெரு
- சியாலி அம்மன் கோயில் தெரு
- ரிச்சி
- சியாலி அம்மன் கோயில் வீதிகள்
- தின மலர்
துரைப்பாக்கம்: சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ரிச்சி தெரு, சியாலி அம்மன் கோயில் தெரு சந்திப்பில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரிச்சி மற்றும் சியாலி அம்மன் கோயில் தெரு சந்திப்பில் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் பையுடன் வந்த 2 பேரை வழிமறித்து சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் இருந்தது. விசாரணையில், பெரம்பூர் கே.எம்.கார்டன் 6வது தெருவை சேர்ந்த சரத்குமார் (32), செம்பியம் மணியம்மை நகரை சேர்ந்த சேரமான் (25) என்பது தெரியவந்தது.
இதில் சரத்குமார் மீது கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சேரமான் மீது கொலை முயற்சி, வழிப்பறி என 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஒட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெடிக்கல் ஷாப் நடத்திய வரும் மகேஷ் (35) மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக லாபத்திற்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த கொளத்தூர் அம்பேத்கர் நகர் 2வது ெதருவை சேர்ந்த முகமது சாதிக் (30) ஆகியோர் இதற்கு உதவியது தெரியவந்தது. அதை தொடார்ந்து போலீசார் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மகேஷ் மற்றும் முகமது சாதிக் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
The post போதை மாத்திரை, கஞ்சா விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர் ரவுடிகள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.