- மதுராந்தகம் ஒன்றியம்
- எம்.எல்.ஏ சுந்தர்
- Maduranthakam
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
- கே. சுந்தர்
- எல்.எம்.
- செங்கல்பட்டு மாவட்டம்
- மதுரந்தாகம் யூனியன்
- கல்லப்பிரான்புரம் ஊராட்சி
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆறு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்என்ஜே நிறுவனத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் மனு அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, அந்த ஊராட்சியில் உள்ள கள்ளபிரான்புரம், நெய்குப்பி, அதியமானம், வள்ளுவப்பக்கம், மேட்டு காலனி உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய், எஸ்என்ஜெ நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜா, மனிதவள மேலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ சுத்திகரிப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், சுத்திகரிப்பு இயந்திரத்தில் ரூ.2 செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் வழங்கும், ரூ.5 நாணயம் செலுத்தினால் 20 லிட்டர் தண்ணீர் வழங்கும் என இயந்திரத்தை பொருத்திய பொறியாளர்கள் கிராம மக்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post மதுராந்தகம் ஒன்றியத்தில் 6 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.