×

மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்த அமெரிக்க துணை தூதர்

மாமல்லபுரம்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் கிறிஸ்டோபர் டபிள்யூ ஹோட்ஜஸ், தனது குடும்பத்தினருடன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மதியம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வருகை தந்தார். தொடர்ந்து, கடற்கரை கோயில் ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். முன்னதாக, கடற்கரை கோயில் வளாகத்தின் முகப்பு பகுதியில் உள்ள, மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக விளங்கியதற்கு சான்றான படகு துறை அகழி பகுதிகளையும் குடும்பத்தோடு சுற்றிப் பார்த்தார்.

அப்போது, சுற்றுலா வழிகாட்டி ஒருவர், கடற்கரை கோயில் கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி பழமை மாறாமல் தொல்லியல் துறையால் கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற வரலாற்று தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். முன்னதாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் வருகையையொட்டி கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

The post மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்த அமெரிக்க துணை தூதர் appeared first on Dinakaran.

Tags : US ,Deputy Ambassador ,Mamallapuram ,US Embassy ,Chennai ,Christopher W. Hodges ,Mamallapuram beach temple ,Arjuna ,US Deputy Ambassador ,
× RELATED அமெரிக்காவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை