திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள புதுமாவிலங்கை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பழனிவேலன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்நிலையில், இவரது மனைவி வள்ளி நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்தபோது பழனிவேலனின் தம்பியான வேல்முருகன், அவரது மனைவி கோமதி ஆகியோர் வள்ளியின் வீட்டின் அருகில் கற்கள் மற்றும் கட்டுமான பொருட்களை இறக்கி வைத்துள்ளனர். இதில், ஏற்கனவே அண்ணன் மற்றும் தம்பிக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வள்ளி ஏன் பொருட்களை இங்கு இறக்குகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், கோமதி தம்பதி, பழனிவேலன் மற்றும் அவரது மனைவி வள்ளியை தகாத வார்த்தைகளால் பேசி கையாலும் அரிவாள்மனையாலும் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பழனிவேலன் மற்றும் அவரது மனைவி வள்ளி, உறவினர்களான சரண், மைதிலி ஆகிய 4 பேரும் கோமதி தரப்பினரை பதிலுக்கு கட்டையாலும், அரிவாள்மனையாலும் தாக்கியுள்ளனர்.
இதில் இருதரப்பினரும் காயமடைந்தனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த மேற்கண்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நிலத்தகராறில் சகோதரர்கள் மாறிமாறி தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.