- டபிள்யூபிஎல் டி20
- பெங்களூர்
- வதோதரா
- பெங்களூரு
- பெண்கள் பிரீமியர் லீக் T20
- தில்லி தலைநகரம்
- டபிள்யூபிஎல் டி 20
- WPL T20 பெங்களூர்
- தின மலர்
வதோதரா: மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டபிள்யுபிஎல் டி20 தொடரின் 4வது போட்டியானது வதோதராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. டெல்லி அணி துவக்க வீராங்கனைகள் மெக்லனின்(17 ரன்), ஷபாலி வர்மா(டக் அவுட்) சொதப்பிய போதும், அடுத்து களமிறங்கிய ஜெமிமா 32 ரன்(22 பந்து) எடுத்தார்.
19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 141 ரன் எடுத்தது. பெங்களூருவின் ஜார்ஜியா, ரேணுகா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 142 ரன் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 2 விக்கெட்டை இழந்து, 16.2 ஓவரில் வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 81(47) ரன், டானி வைட் 42 ரன்(33) எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர். டெல்லி அணியில் அருந்ததி, ஷிகா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
The post டபிள்யுபிஎல் டி20 பெங்களூரு அணி வெற்றி appeared first on Dinakaran.