×

கத்தார் ஓபன் இரட்டையர் டென்னிஸ் யூகி பாம்ப்ரி இணை அமர்க்கள வெற்றி

தோஹா: கத்தார் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் நேற்று இந்தியாவின் யூகி பாம்ப்ரி- குரோஷியா வீரர் இவான் டோடிக் இணை அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. கத்தாரின் தோஹா நகரில் நேற்று, ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி – குரோஷியா வீரர் இவான் டோடிக் இணை, ஸ்பெயின் வீரர் டேனியல் மெரிடா அகுய்லர்-
கத்தார் வீரர் முபாரக் ஸாயித் அல் ஹராசி இணையுடன் மோதியது.

முதல் செட்டை பாம்ப்ரி இணை சிறப்பாக ஆடி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் பாம்ப்ரி இணைே ஆதிக்கம் செலுத்தியது. இதனால், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பாம்ப்ரி இணை அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆடவர் இரட்டையர் போட்டியில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டெஸ்கோ கார்மோனா- செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இணை அநாயாசமாக ஆடி 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

The post கத்தார் ஓபன் இரட்டையர் டென்னிஸ் யூகி பாம்ப்ரி இணை அமர்க்கள வெற்றி appeared first on Dinakaran.

Tags : Qatar Open ,Yuki Bhambri ,Doha ,India ,Croatia ,Ivan Dodic ,Doha, Qatar ,Dinakaran ,
× RELATED துபாய் ஓபன் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி இணை சாம்பியன்