- இந்தியா
- ஸ்பெயின்
- ப்ரோ ஹாக்கி லீக்
- புவனேஸ்வர்
- FIH புரோ ஹாக்கி லீக்
- பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பு
- 6வது FIH புரோ ஹாக்கி லீக் தொடர்
- ஒடிசாவின்...
- புரோ ஹாக்கி லீக் தொடர்
- தின மலர்
புவனேஸ்வர்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் ஸ்பெயின் அணியை இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. எப்ஐஎச் 6வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஸ்பெயின் – இந்தியா அணிகள் மோதின.
இரு அணிகளும் சம பலத்தில் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் இரு அணியினரும் தீவிர முயற்சி செய்தும் கோல் போட முடியவில்லை. இருப்பினும் 2வது பாதியில் இந்தியாவின் மந்தீப் சிங், தில்ப்ரீத் சிங் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதன் பின் கடைசி வரை ஸ்பெயின் அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
The post புரோ ஹாக்கி லீக் தொடர் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா அசத்தல் appeared first on Dinakaran.