- பாரிஸ் ஃப்ரீஸ்டைல் சதுரங்கம்
- குகேஷ் பிரக்ஞானந்தா
- கார்ல்சென்
- பாரிஸ்
- இந்தியா
- குகேஷ்
- பிரக்ஞானந்தா
- அர்ஜூன் எரிகாய்சி
- பாரிஸ் ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம்
- ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம்
- ஜெர்மனியின் வெய்சென்ஹாஸ்...
- தின மலர்
பாரிஸ்: வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பாரிஸ் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர்களான உலக செஸ் சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி பங்கேற்க உள்ளனர். ஜெர்மனியின் வெய்சன்ஹாஸ் நகரில் சமீபத்தில் நடந்த ஃப்ரிஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் குகேஷ் கலந்து கொண்டு ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் கடைசி இடம் பிடித்தார்.
இந்நிலையில் வரும் ஏப்ரலில் பிரான்சின் பாரிஸ் நகரில் பாரிஸ் ஃப்ரிஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் உலக நம்பர் 1 செஸ் வீரரான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்க உள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இவர்களை தவிர, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
செஸ் வீரர்களுக்கான ஃபிடே தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களில் அர்ஜுன் 2801 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ் 2777 புள்ளிகள் பெற்றுள்ளார். அதேசமயம், உடனுக்குடன் வெளியாகி வரும் இஎல்ஓ தரவரிசை பட்டியலில் அர்ஜுன், 2776.7 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரக்ஞானந்தாவின் ஃபிடே ரேட்டிங், 2741. இந்திய வீரர்களில் பிரக்ஞானந்தா நல்ல ஃபார்மில் உள்ளார். இந்தாண்டு நடந்த டாடா மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்தி அவர் அதிர்ச்சி தந்தார். பாரிஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா பங்கேற்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாரிஸ் ஃப்ரிஸ்டைல் செஸ் கார்ல்சனுடன் குகேஷ் பிரக்ஞானந்தா மோதல்: ஏப்ரலில் நடைபெறும் appeared first on Dinakaran.