×

ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் கடை அமைக்கும் பணி: எம்எல்ஏ அடிக்கல்

 

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்தூர் கிராமத்தில் ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணியினை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம், செல்லாத்தூர் கிராமத்தில் திருத்தணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனி, சண்முகம், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆர்.கே.பேட்டை முன்னாள் மாவட்ட பொருளாளர் சத்யராஜ், முன்னாள் கவுன்சிலர் செல்லாத்தூர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் சிவகுமார், கூட்டுறவு செயலாளர் ஏழுமலை, சேல்ஸ்மேன் கஜேந்திரன், நாகப்பன் சாமுவேல் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் மாத்தையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் கடை அமைக்கும் பணி: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : R.K.Pettai ,MLA ,Thirutani ,MLA S. Chandran ,Sellathur ,R.K.Pettai. ,
× RELATED புதர்மண்டி காணப்படும் பெரிய நாகபூண்டி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை