×

106 கிலோ பட்டுக்கூடு ₹80 ஆயிரத்திற்கு ஏலம்

ராசிபுரம், பிப்.18: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 106 கிலோ பட்டுக்கூடு ₹80 ஆயிரத்திற்கு விற்பனையானது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 106 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகப்பட்சம் கிலோ 750க்கும், குறைந்தபட்சம் ₹745க்கும் விற்பனையானது. மொத்தம் 106 கிலோ பட்டு கூடு ₹80 ஆயிரத்திற்கு ஏலம் போனது. சராசரியாக கிலோ ₹747க்கு விற்பனையானது.

The post 106 கிலோ பட்டுக்கூடு ₹80 ஆயிரத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram, Namakkal district ,Namakkal ,Karur ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் ஏல மையத்தில் 98 கிலோ பட்டுக்கூடுகள் ₹68 ஆயிரத்திற்கு ஏலம்