×

இரட்டைக்கொலை எதிரொலியாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

குத்தாலம்: இரட்டை கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரக்கத்திற்குட்பட்ட முட்டம் பகுதியில் இன்ஜினியரிங் மாணவர் ஹரி சக்தி உள்பட 2 பேர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கும், தஞ்சை மாவட்டம் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மலைச்சாமியை பெரம்பூர் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post இரட்டைக்கொலை எதிரொலியாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Perambur ,Mayiladuthurai ,Hari Shakthi ,Muttam ,Mayiladuthurai… ,
× RELATED மணல் கடத்திய லாரி பறிமுதல்