வதோதரா: 5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் ஐபிஎல் தொடர் 3வது சீசன் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் உ.பி.வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தீப்தி சர்மா 39 ரன் எடுத்தார். குஜராத் பவுலிங்கில், பிரியா மிஸ்ரா 3, ஆஷ்லே கார்ட்னர், டியான்ட்ரா டாட்டின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில், பெத் மூனி, தயாளன் ஹேமலதா டக்அவுட் ஆக லாரா வோல்வார்ட் 22, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 52, ஹர்லீன் தியோல் 34, டியான்ட்ரா டாட்டின் 33 ரன் எடுத்தனர். 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராயல்சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
The post மகளிர் ஐபிஎல் தொடர்; உ.பி.யை வீழ்த்திய குஜராத்.! டெல்லி-ஆர்சிபி இன்று மோதல் appeared first on Dinakaran.