சென்னை: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் போது கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.