பள்ளிபாளையம், பிப்.17: நகரங்களை தொடர்ந்து கிராமப்பகுதிகளிலும் வீடு வீடாக செல்லும் ஊராட்சி பணியாளர்கள் வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பைகளை பிரித்து வாங்கி உரமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் போன்ற நகராட்சி பகுதிகளில் மட்டுமே நடைபெற்று வந்த குப்பைகளை தரம் பிரித்து வாங்கி பதப்படுத்தும் பணிகள், தற்போது ஊராட்சி பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொக்கராயன்பேட்டை, களியனூர், தட்டாங்குட்டை, பாதரை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும், ஊராட்சி பணியாளர்கள் இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சியின் குப்பை வாகனங்களில் மக்கும், மக்கா குப்பைகளுக்கு தனித்தனியாக தடுப்பறைகளை ஏற்படுத்திய வீடு தோறும், ஒலிபெருக்கி மூலம் அரசின் தூய்மை பணிகள், பிளாஸ்டிக் கேரிபேக்குகளின் தீமைகள், சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
The post வீடுகள்தோறும் தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.