×

₹1.28 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி

 

சேந்தமங்கலம், பிப்.17: புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சியில், ₹1.28 கோடியில் கிராம அறிவு சார் மையம் கட்டும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தனர்.
புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியில், ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தின் கீழ், ₹1.28 கோடியில் கிராம அறிவு சார் மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு, அறிவுசார் மையம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, அரசுத்துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ₹1.28 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Minister ,Mathivendan ,Rajesh Kumar ,Karaikurichi panchayat ,Puduchattaram ,Adi ,Dravidar ,Dinakaran ,
× RELATED காளப்பநாயக்கன்பட்டியில் மயானத்தில்...