×

போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டிகள் நிறைவு

 

சேலம், பிப். 17: சேலம் மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டிகள், நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
போட்டிகளின் முடிவில், பெண்கள் பிரிவில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. ஆத்தூர் பாரதியார் பள்ளி 2ம் இடமும், ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் அணி 3ம் இடமும், ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி 4ம் இடமும் பிடித்தன. இதேபோல் ஆண்கள் பிரிவில் கன்னங்குறிச்சி டிகேவிசி அணி முதலிடம் பிடித்தது. பூலாவரி விஎஸ்ஏ அணி 2ம் இடம், செழியன் பிரதர்ஸ் அணி 3ம் இடம், செயின்ட் மேரிஸ் அணி 4ம் இடம் பிடித்தன.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினார். விழாவில் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா, கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், செயலாளர் சண்முகவேல், நிர்வாகிகள் ராஜாராம், ஹரிகிருஷ்ணன், வேங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Police-Public Relations Volleyball Tournament ,Salem ,Salem Municipal Police ,District Volleyball Association ,Dinakaran ,
× RELATED மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு...