×

விதிமுறையை மீறிய மருந்து கடையின் லைசென்ஸ் ரத்து

 

சேலம், பிப்.17: சேலத்தில் போதை மாத்திரை விற்பனை புகாரால், விதிமுறையை மீறி செயல்பட்ட மருந்து கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் கடந்த மாதம் போதை மாத்திரையை விற்ற 15பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதில், மருந்து கடை உரிமையாளர்கள் 3பேரும் சிக்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் டாக்டரின் மருந்து இன்றி மாத்திரைகள் வழங்குதல், ரசீது இன்றி மருந்து விற்பனை உள்ளிட்ட விதிகளை மீறிய 4 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, சேலத்தில் விதிமுறையை மீறி செயல்பட்ட ஒரு மருந்து கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி கொடுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்ட ரீதியான நடவடிக்கையும், கடையின் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, டாக்ரின் பரிந்துரையின்றி தூக்க, வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது,’ என்றனர்.

The post விதிமுறையை மீறிய மருந்து கடையின் லைசென்ஸ் ரத்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலம் ரவுடி கொடூர கொலை ஏன்?...