கரூர், பிப். 17: கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணை வளாகத்தை ஆக்ரமித்துள்ள செடி கொடிகள் அகற்ற வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூர் மாநகருக்குள் அமராவதி ஆறு இந்த தடுப்பணையை தாண்டித்தான் உள்ளே வருகிறது.இந்நிலையில், தண்ணீரின் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் தடுபபணைக்கு முன்னதாக அதிகளவு முட்செடிகள் மற்றும் செடி கொடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனை அகற்ற வேண்டும் என அனைவரும எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போதைய நிலையில் குறைந்த அளவில் தண்ணீர் வந்தாலும் மழைக்காலங்களில் அதிகளவு தடுப்பணை வழியாக தண்ணீர் செல்வது வழக்கம்.எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு தடுப்பணைக்கு முன்னதாக வளர்ந்துள்ள செடி கொடிகளை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post பெரியாண்டாங்கோயில் தடுப்பணையை ஆக்கிரமித்த செடி, கொடி அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.