முத்தூர் அருகே நூல் மில்லில் தீ விபத்து

 

வெள்ளக்கோவில், பிப்.17: முத்தூர் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதமானது வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூர் அருகே தண்ணீர்பந்தர் பகுதியில் அரவிந்(45) என்பவருக்கு சொந்தமான கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் நூல் மில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர் நேற்று காலை காலை 11 மணி அளவில் மில்லின் உள்ள மிசனில் ஒரு பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதையடுத்து வெள்ளக்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மில்லில் மெஷின் பஞ்சு அடுக்கி வைத்திருக்கும் பகுதியில் பற்றிய தீயை தண்ணீர் அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வண்டி வரவழைக்கப்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர் இருப்பினும் மெஷின், பஞ்சு, மேற்கூறை என பல லட்சம் அளவில் சேதம் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post முத்தூர் அருகே நூல் மில்லில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: