×

மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. இதனை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் 1 வார காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக, புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கையை ஒன்றிய பாஜ அரசு மதிப்பதாக தெரிவதில்லை. மாற்றந்தாய் மனபான்மையுடன் நடத்தி வருகிறது. மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிப்பதும் இல்லை. எனவே மீனவ சமுதாய மக்களை இலங்கை அரசின் கொடுமையில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Muslim League ,Union Government ,Sri Lankan government ,Chennai ,President ,V.M.S.Mustapha ,Sri Lankan Navy ,Karaikal district ,Karaikal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது: என்.ஆர்.இளங்கோ