×

ஐஎஸ்பிஎல் டி10 மாஜி மும்பை சாம்பியன்

தானே: ஐஎஸ்பிஎல் டி10 கிரிக்கெட் 2வது தொடரின் இறுதிப் போட்டி தானே நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் மாஜி மும்பை, நகர் கேவீர் அணிகள் மோதின. முதலில் ஆடிய நகர் அணி துவக்க வீரர்கள் சாகர் அலி, ஆகாஷ் தரகர் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன் குவித்தனர். 10 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழந்து 120 ரன் குவித்தது. பின், 121 ரன் இலக்குடன் மாஜி மும்பை ஆடியது. 9.3 ஓவரில் அந்த அணி 121 ரன் குவித்து அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. வெற்றி பெற்றோருக்கு கோப்பை மற்றும் பரிசுகளை மும்பை அணி உரிமையாளர் அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் வழங்கினர்.

The post ஐஎஸ்பிஎல் டி10 மாஜி மும்பை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : ISPL T10 Maji Mumbai Champion ,Thane ,ISPL T10 Cricket 2nd Series ,Maji Mumbai ,Nagar Cavir ,Nagar ,Sagar Ali ,Akash ,Dinakaran ,
× RELATED தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு