×

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 23ம் தேதி பாக்.குடன் இந்திய அணி மோதல்: முழு பட்டியல் வெளியானது

துபாய்: பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் நடக்கும் தேதி, பங்கேற்கும் அணிகள், இடம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.  பாகிஸ்தானில் வரும் 19ம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டிகள் துவங்க உள்ளன. இறுதிப் போட்டி மார்ச் 9ம் தேதி லாகூர் அல்லது துபாயில் நடக்கும். இப்போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இந்தியா இரு முறை சாம்பயன் பட்டம் வென்றுள்ளது. 2017ல் இறுதிப்போட்டியில் தோற்று 2ம் இடம் பிடித்தது. இந்தியா மோதும் வங்கதேசத்துடனான முதல் போட்டி, வரும் 20ம் தேதி நடைபெறும். இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 23ம் தேதி துபாயில் நடக்கும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கவுள்ளன.

The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 23ம் தேதி பாக்.குடன் இந்திய அணி மோதல்: முழு பட்டியல் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Champions Cup Cricket ,India ,Pakistan ,Dubai ,Champions Cup One-Day ,ICC Champions Cup One-Day ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணி வெற்றி ஊர்வலம்;...