- கிருஷ்ணவேணி
- ஹைதெராபாத்
- சித்தாஜல்லு கிருஷ்ணவேனி
- ஃபிலிம் நகர், ஹைத
- பங்கிடி
- மேற்கு கோதாவரி மாவட்டம்
- ஆந்திரப் பிரதேசம்...
ஐதராபாத்: தமிழில் 1940ல் வெளியான ‘காமவல்லி’ என்ற படத்தில் நடித்த நடிகையும், தயாரிப்பாளரும், பாடகியுமான சித்தஜல்லு கிருஷ்ணவேணி, இன்று தனது 100வது வயதில் ஐதராபாத் பிலிம் நகரிலுள்ள வீட்டில் காலமானார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பங்கிடி பகுதியில் 1924 டிசம்பர் 24ம் தேதி பிறந்த கிருஷ்ணவேணி, முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். 1935ல் ‘சதி அனசூயா’ என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது 15வது வயதில், 1939ல் மிர்சாபுரம் ஜமீன்தார் மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை திருமணம் செய்தார். சென்னையில் இருந்த கணவரின் சோபனாசல ஸ்டுடியோவை நடத்தி, பழம்பெரும் மேடை நாடக நடிகர்களை திரைப்படங்களில் அறிமுகம் செய்தார்.
1949ல் ‘மன தேசம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்த கிருஷ்ணவேணி, நடிகராக என்.டி.ராமாராவ், இசை அமைப்பாளராக கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், பின்னணி பாடகியாக பி.லீலா ஆகியோரை அறிமுகம் செய்தார். இப்படம் ‘விப்ரதாஸ்’ என்ற பெங்காலி நாவலை அடிப்படையாக கொண்டது. அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள கிருஷ்ணவேணி, தெலுங்கில் ‘மல்லி பெல்லி’, ‘பக்த பிரஹலாதா’, ‘பீஷ்மா’, ‘பிரம்ம ரதம்’, ‘கொல்லபாமா’ ஆகிய படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்தார். தனது மகள் மேகா ராஜ்யலட்சுமி அனுராதா என்ற பெயரின் முதலெழுத்ைத வைத்து, ‘எம்ஆர்ஏ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார். அன்னமாச்சார்யா கீர்த்தனையை தெலுங்கு படம் ஒன்றில் முதன்முதலாக பாடினார்.
The post 100 வயது நடிகை கிருஷ்ணவேணி காலமானார் appeared first on Dinakaran.