×

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியானது!!

கொல்கத்தா: கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் 3வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.

74 லீக் போட்டிகளின் அடிப்படையில் புல்லிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 1 தகுதி போட்டிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். மேலும் 3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் விளையாடும். குவாலிஃபைர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இவ்வாறாக போட்டி அட்டவணை வடிவமைக்கப்படும்.

குவாலிபியர் 1 போட்டி மே 20ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 21ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23ம் தேதியும், தொடரின் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

The post கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியானது!! appeared first on Dinakaran.

Tags : IPL ,KOLKATA ,IPL CRICKET SERIES ,Royal Challengers Bangalore ,Mumbai Indians ,Sunrisers Hyderabad ,Kolkata Knight Riders ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா – குஜராத் இடையிலான ஏப்.6...