சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவிவந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காக்க ஆவி தரவும் தயங்கிடோம். தலைவர் கலைஞர் அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல்.
40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?: கனிமொழி எம்பி கடும் கண்டனம் appeared first on Dinakaran.