- தமிழ்நாடு அரசு
- பி.எம்.ஆர்.
- திமுக
- பாராளுமன்ற
- சென்னை
- ஐ. கிரிராஜன்
- மக்களவை
- யூனியன் அரசு
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பாண்டிய மன்னன்
- அறிவுடை நம்பி
- புராணநூத்ரு
- தின மலர்
சென்னை: 2025ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து திமுக நாடளுமன்ற உறுப்பினர் இரா.கிரிராஜன் மக்களவையில் உரையாற்றி பேசியது: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 2019ம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரையாக இருந்த புறநானூற்று பாடலையும், 2020ம் ஆண்டு முதல் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசியதை குறிப்பிட்டு பேசிய எம்பி கிரிராஜன், இந்த முறை திருக்குறள் இடம்பெறவில்லை என்றும், மாறாக தெலுங்கு கவிதையை மேற்கோள் காட்டியுள்ளதாக சாடியுள்ளார்.
ஒன்றிய அரசு மக்களை பற்றி சிந்திக்கிறதா என்றால் இல்லை என குற்றம்சாட்டியுள்ள கிரிராஜன், மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே இருந்துகொண்டு வருமானத்தில் 22.6 சதவிகிதத்தையும், செல்வத்தில் 40.1 சதவிகிதத்தையும் கட்டுப்படுத்தும் சில பில்லியனர்களை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.04 சதவிகிதத்திற்கு தமிழ்நாடு பங்களிக்கும் நிலையில், அதிகாரப்பகிர்வு மூலம் 4.08 சதவிகித்ததை மட்டுமே பெறுகிறது எனவும் உரையில் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கான வரி பகிர்வை 42 சதவிகிதமாக 14வது நிதிக்குழு பரிந்துரைத்தநிலையில், அதை 41 சதவிகிதமாக 5வது நிதி குழு
குறைத்ததை குறிப்பிட்டுள்ள திமுக எம்பி கிரிராஜன், உண்மையான அதிகாரப்பகிர்வு என்பது 32 சதவிகிதமாக மட்டுமே உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கல்விக்கான செலவினத்தில் 13.6 சதவிகிதத்தை மாநில அரசு ஒதுக்கும் நிலையில், 2.5 சதவிகிதத்தை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. ஒன்றிய அரசின் அதிகாரப்பகிர்வில் பாரபட்சம் காட்டும் நிலையிலும், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையின் தேசிய சராசரி 27 சதவிகிதமாக உள்ள நிலையிலும், தமிழ்நாடு 47 சதவிகிதத்தை எட்டியுள்ளது.தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் தேசிய கல்வி இயக்கத்தின் நிதி ரூ.2,152 கோடியை தர மறுப்பது ஏன் என தனது உரையின்போது கேள்வி எழுப்பிய கிரிராஜன், இந்தியை திணிக்கும் நோக்கில் பிஎம்ரூ.திட்டத்தில் கையெழுத்திட ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது, இது 40 லட்சம் தமிழக மாணவர்கள்
பாதிக்கும் வகையிலான மாநில அரசின் மீது திணிக்கப்படும் மொழிரீதியான பயங்கரவாதம் என்றும் குற்றச் சாட்டை முன்வைத்தார்.
நாட்டின் வேறு எந்த மாநில அரசு மீதும் எனக்கு பொறாமை இல்லை என குறிப்பிட்ட கிரிராஜன், தமிழ்நாட்டு பெண் நிதியமைச்சர் (தமிழ் மகள்) பட்ஜெட் உரையை தொடங்கிய அரை மணி நேரத்தில் பீகார் மாநிலத்தை நான்கு முறை குறிப்பிட்டதையும், ஆனால் முழு பட்ஜெட் உரையிலும் தமிழ்நாட்டின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை என்பதையும் எடுத்துரைத்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.19 சதவிகிதம் பங்களிக்கும் உத்தரப்பிரதேச அரசு, ஒன்றிய அரசிடமிருந்து 17.94 சதவிகிதமும், 2.7 சதவிகித பங்களிப்பை கொடுக்கும் பீகார் அரசு 10.08 சதவிகிதமும் அதிகாரப் பகிர்வை திரும்பப் பெறுகிறது. ஆனால் தமிழ்நாடு அதிக பங்களிப்பை வழங்குகினாலும், உரிய அதிகாரப்பகிர்வை பெறவில்லை. இது தமிழ்நாட்டின் மீது மாற்றந்தாய் மனப்பாண்மையை ஒன்றிய அரசு கொண்டுள்ளது தெரிகிறது. ஏன் இந்த பாகுபாடு? மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்துவதால் ஒன்றிய அரசு இந்த மாற்றாந்தாய் மனப்பாண்மை கொண்டுள்ளதா? நாங்கள் சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம் என பெரு மையுடன் சொல்லலாம்.
கிரிராஜன் உரையாற்றியபோது, பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி 2014 ஜூன் 11ல் நாடாளுமன்றத்தில் பேசியபோது, டெல்லியில் சாதகமற்ற ஆட்சி அமைந்தால் மாநிலத்திற்கு என்ன நடக்கும் என்றும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அனுபவித்திருப்பதாகவும், மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கும் சதித்திட்டங்கள் குறித்து தனக்கு முழு அனுபவம் உள்ளதாகவும், மாநிலங்களின் பிரச்னைகளை புரிந்து கொண்ட ஒருவருக்கு, நாட்டின் பிரதமராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.
The post இந்தியை திணிக்கும் நோக்கில் பிஎம்ரூ. திட்டத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்காது: நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு appeared first on Dinakaran.