- கரூர் தேசிய பசுமைப் படை
- கரூர்
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை
- மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை
- கரூர் சி.எஸ்.ஐ.
- தின மலர்
கரூர், பிப். 16: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மற்றும் மத்திய அரசு சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் முறை கரூர் மாவட்டம் தேசிய பசுமைப் படை ஏற்பாட்டின் கீழ் கரூர் சிஎஸ்ஐ காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு மாசுபடுதலை தடுத்தல் தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வி.திருமூர்த்தி தலைமை வகித்தார். சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோலப்போட்டிகள், சுற்றுச்சூழல், நிலையான வாழ்க்கைமுறை, காற்று நீர் மாசுபாடு குறைத்தல், மின்சாரம் சேமிப்பு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடுப்பு, குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 50 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுக்களுக்கும் 5 மாணவிகள் கொண்ட 10 குழுவாக பிரித்து நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளாஎஸ்திபா மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சரின் பசுமைத் தோழர் திருச்சி என் கோபால் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு வாரியம் துணைப் பொறியாளர் வேல்முருகன் கலந்து கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு கோலப் போட்டியை துவக்கிவைத்தனர். மேலும் பள்ளி தேசிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சுமதி, மற்றும் கனிமொழி , அஞ்சுகம், மேலும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பசுமை படை பள்ளி மாணவிகள் செய்திருந்த கோலங்களை பள்ளி ஆசிரியர்கள்கோலத்திற்கு மதிப்பெண் வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு நோட்டு பேனா, பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக நிகழ்வுக்கு வந்து கலந்து கொண்ட அனைத்து மாணவிகள் ஆசிரியர்கள் சீடுஅறக்கட்டளை பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி நன்றி கூறினார்.
The post கரூர் தேசிய பசுமைப்படை சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த கோலப்போட்டிகள் appeared first on Dinakaran.