×

கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

கரூர், பிப், 16: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், நிலுவை சம்பளம் மற்றும் பி.எப்.தொகை வழங்க வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்கமான எல்.பி.எப் தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.பி.எப் மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்தும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டன.

 

The post கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur Government Hospital ,Karur ,Government Medical College Hospital ,Gandhigram ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார...