கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறியாளர் கருப்புக்கொடி கட்டி தொடர் போராட்டம்

 

அவிநாசி, பிப்.16: ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்தப்படி உயர்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளர்கள் நேற்று முதல் தொடர் கருப்புக்கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களுடன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தப்படி கூலி உயர்வை வழங்க வேண்டும். மின் கட்டணம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இரு தரப்பினர் சம்மத்துடன் புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சுல்சர், ரேப்பியர், ஏர்ஜெட் உள்ளிட்ட நவீன தறிகளுக்கு மட்டுமல்லாமல், நாடாவில் இயங்கும் சாதா விசைத்தறிகளுக்கும், தனி ரகம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தெக்கலூர்,புதுப்பாளையம்,அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் நேற்று முதல் தங்களது விசைத்தறிக்கூடங்களில் கருப்புக் கொடி கட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறியாளர் கருப்புக்கொடி கட்டி தொடர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: