×

பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கெங்கவல்லி, பிப். 16: ஆத்தூர் அடுத்த சதாசிவபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் பச்சமுத்து(17). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தந்தை ராமசாமி குடி பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால், அடிக்கடி மகனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம், தந்தை கோபத்தில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த பச்சமுத்து, நேற்று அதிகாலை காட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகில், எழும்பூர் இருந்து சேலம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Ramasamy ,Pachamuthu ,Sadashivapuram Nadutheru ,Athur ,
× RELATED வாலிபர் மீது வழக்கு