×

மளிகை கடையில் 3 கிலோ குட்கா பதுக்கிய பெண் கைது

அயோத்தியாப்பட்டணம், பிப். 16: அயோத்தியாப்பட்டணம் அடுத்த காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளில், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அயோத்தியாப் பட்டணம் சந்தப்பேட்டை பகுதியில் கடை வைத்துள்ள கோவிந்தம்மாள்(54) என்பவர் கடையில் நடத்திய சோதனையில், ஹான்ஸ் 85 பாக்கெட், விமல் பாக்கு 16 பாக்கெட், பவுஜ் 1.20 கிலோ, கூலிப் 9 பாக்கெட் என 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கோவிந்தம்மாளை கைது செய்தனர்.

The post மளிகை கடையில் 3 கிலோ குட்கா பதுக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Inspector ,Manivannan ,Karipatti ,Chandapettai ,Ayodhyapatnam… ,Dinakaran ,
× RELATED மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் லாரியில் தீ