×

கடைகளை மறைத்து பிளக்ஸ் பேனர்

கெங்கவல்லி, பிப்.16: வீரகனூர் பேரூராட்சியில், பெரம்பலூர் நெடுஞ்சாலையில் வீரகனூர் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலைகளில் இருபுறமும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இந்த கடைகளின் முன்பாக ஜெயலலிதா பிறந்த நாள் விழா, பிளக்ஸ் பேனர்களை அதிமுகவினர் வரிசையாக வைத்துள்ளனர். நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பேரூராட்சி பஸ் ஸ்டாப்பில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம், போலீசாரின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனரை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கடைகளை மறைத்து பிளக்ஸ் பேனர் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Veeraganur Town Panchayat ,Veeraganur Bus Stop ,Perambalur Highway ,AIADMK ,Jayalalithaa ,
× RELATED வேலைநிறுத்த போராட்டம்