அதன்படி தற்போது வரை 21 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு ஈடாக 730 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுதலை செய்துள்ளன. இரண்டாம் கட்டமாக ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேல் பணய கைதிகள் அனைவரையும் விடுவிப்பது மற்றும் காலவரையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீனர்களை கொன்ற இஸ்ரேல் ராணுவம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ள ஹமாஸ், வரும் சனிக்கிழமை 3 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க முடியாது என அறிவித்திருந்தது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேல் பணய கைதிகளையும் விடுவிக்கா விட்டால், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, காசா மீது தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்பின் கூற்றை உறுதி செய்யும் விதமாக, “போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவிக்கா விட்டால் காசா மீது மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கைகள் காரணமாக, ஏற்கனவே அறிவித்தபடி மேலும் 3 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதாக கடந்த 13ம் தேதி ஹமாஸ் திடீரென அறிவித்தது. இந்நிலையில் ஹமாஸ் பிடியில் இருந்து நேற்று மேலும் 3 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்படி லாய்ர் ஹார்ன்(46) இவர் இஸ்ரேல் மற்றும் அர்ஜென்டினாவின் இரட்டை குடியுரிமை பெற்றவர். அமெரிக்க இஸ்ரேலியர் சாகுய் டெக்கல் சென்(36) மற்றும் ரஷ்ய இஸ்ரேலியர் அலெக்சாண்டர் ட்ரூபனோவ்(26) ஆகியோர் நேற்று ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக இஸ்ரேலில் உள்ள 369 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.
The post போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் மேலும் 3 பணய கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்: 369 பாலஸ்தீனர்களை விடுவித்த இஸ்ரேல் appeared first on Dinakaran.