அரசு நிர்வாக தலைவர் பதவி வாடிகனில் முதல்முறையாக கன்னியாஸ்திரி நியமனம்

ரோம்: முதல் முறையாக வாடிகன் அரசாங்க நிர்வாகத்தின் தலைவராக கன்னியாஸ்திரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரில் உள்ள வாடிகன் உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமாக உள்ளது. வாடிகனின் அரசியல் தலைவராக போப் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், வாடிகன் அரசாங்கத்தின் நிர்வாக தலைவராக இத்தாலி நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ரபேயல்லா பெட்ரினி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் வாடிகன் அருங்காட்சியகத்தின் செயலாளர் ஜெனரலாக இருந்தார்.

தற்போது வாடிகன் நிர்வாக தலைவராக இருக்கும் கர்தினல் பெர்னாண்டோ வெர்கஸ் அல்ஸகா வரும் மார்ச் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து காலியாகும் அந்த பதவிக்கு கன்னியாஸ்திரி ரபேயல்லா பெட்ரினியை போப் பிரான்சிஸ் நியமித்துள்ளார். வாடிகன் போப் அலுவலகத்தில் பல்வேறு பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்க நிர்வாக தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post அரசு நிர்வாக தலைவர் பதவி வாடிகனில் முதல்முறையாக கன்னியாஸ்திரி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: