×

பிக்கில்பால் பிரீமியர் லீக் சென்னையில் துவக்கம்

சென்னை: சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கிய பிக்கில்பால் பிரீமியர் லீக் போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. தென் இந்தியாவில் பிக்கில்பால் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டிகள் 2 நாட்கள் நடக்கவுள்ளன. துவக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக உறுப்பினர் செயலாளர் மேகநாத் ரெட்டி, கேல்ரத்னா விருது வென்றுள்ள டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பிக்கில்பால் பிரீமியர் லீக் சென்னையில் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pickleball Premier League ,Chennai ,Jawaharlal Nehru Indoor Stadium ,Pickleball ,South India ,Tamil Nadu Sports… ,Dinakaran ,
× RELATED சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்