சென்னை: குற்ற வழக்குகளின் விசாரணையில் புலன் விசாரணை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நன்னிலம் போலீசில் பதிவான கொலை வழக்கில் புகார்தாரர், சம்பவத்தை வீடியோ எடுத்த மொபைலை ஆதாரமாக வழங்கியுள்ளார். மொபைலை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், மகனை சாட்சியாக விசாரிக்கவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுதாரர் தந்த வாக்குமூலத்தில் மொபைல் பற்றி எதுவும் கூறாத நிலையில், அதனை ஆதாரமாக சேர்க்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
குற்ற வழக்கு புலன் விசாரணையின் போது, சட்ட விதிகளை பின்பற்றும்படி காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். மேலும், புகார்தாரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை என்றும் ஐகோர்ட் வேதனை தெரிவித்தது.
The post குற்ற வழக்குகளின் விசாரணையில் புலன் விசாரணை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர் : ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.