×

மேலும் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்: இஸ்ரேல் சிறையில் இருந்த 369 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிப்பு

எருசலேம்: ஹமாஸ் தனது பிடியில் வைத்து இருந்த மேலும் 3 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதேபோல், இஸ்ரேல் சிறையில் இருந்த 369 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலிய ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அது முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பிறகு அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இஸ்ரேல் ராணுவத்தின் அர்ஜென்டைன் யாரிர் ஹார்ன், சகுயி தெகெல், சாஷா டுரோபோநோவ் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் மூலம் ஹமாஸ் பிடியில் இருந்து விடுதலையான இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் சிலர் அவர்களின் பிடியில் உள்ளனர் அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது. அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகளில் யாஹர் ஹரன் (வயது 46), அலெக்சாண்டர் ருபெனோ (வயது 29), சஹொய் டிகெல் ஷென் (வயது 36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.

The post மேலும் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்: இஸ்ரேல் சிறையில் இருந்த 369 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Jerusalem ,Israeli army ,Dinakaran ,
× RELATED போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி...