×

இந்திய பெண்ணை மீண்டும் பணியமர்த்த ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்க சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 முதல் உதவியாளராக பணியாற்றிய செந்தில்குமாரி, 2018ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் செந்தில்குமாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் ஒப்பந்த தொழிலாளர் எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மனு நிராகரிப்பை எதிர்த்து செந்தில்குமாரி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். தூதரகங்கள், துணை தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, நாட்டின் சமூக பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தும் என தெரிவித்து இந்திய பெண்ணை மீண்டும் பணியமர்த்த சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு உத்தரவிட்டார்.

The post இந்திய பெண்ணை மீண்டும் பணியமர்த்த ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Sri Lankan Deputy Embassy ,Sentil Kumari ,
× RELATED வனத்துறை அறிக்கையில் முரண்பாடு உள்ளது – ஐகோர்ட்