இதையடுத்து திஷா கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. குழந்தைகளுக்கான அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.30,000லிருந்து ரூ.75ஆயிரமாக உயர்த்தப்படும். திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022 வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசு நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதில் தாமதமாகிறது. ஒன்றிய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க திஷா குழு வலியுறுத்த வேண்டும். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புக்கான அலகு தொகையை ரூ.3.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறோம். ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடி பயனாளிகளுக்கும் சென்றடைவதில் மாநில அரசின் பங்கு முக்கியம்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகையை காலதாமதமின்றி விடுவிக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவைத் தொகையாக ரூ.2,118 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவைத் தொகயை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேங்காய் விவசாயிகள் தொடர்பான செங்கோட்டையன் கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என பாகுபாடும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்துகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!! appeared first on Dinakaran.