டெல்லி: தவறு செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மதுபான முறைகேடு வழக்கில் கைதான அருண்குமார் திரிபாதி என்பவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அருண்குமார் திரிபாதியின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.