கரூர், பிப். 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வாக உள்ள சாக்கடை வடிகால்கள் தரம் உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம்கரூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. தாந்தோணிமலை, சணப்பிரட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மற்றும் சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சில இடங்களில் செல்லும் வடிகால்கள் மிகவும் தரையோரு தரையாக உள்ளது.
இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர், கழிவு நீருடன் சேர்ந்து கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு தாழ்வாக உள்ள பகுதிகளில் உள்ள சாக்கடை வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்புகளுக்குள் மழைநீர் மற்றும் கழிவு நீருடன் சேர்ந்து புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து விரைந்து மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் மாநகராட்சியில் சாக்கடை வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.