- புல்வாமா தாக்குதல் ஆண்டு நினைவு நாள்
- சிக்கன்னா கல்லூரி
- திருப்பூர்
- புல்வாமா பயங்கரவாத தாக்குதல்
- புல்வாமா
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்...
- தின மலர்
திருப்பூர், பிப்.15: புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில்,இந்திய துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்,பொது நல அமைப்பினர்,தன்னார்வலர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
The post சிக்கண்ணா கல்லூரியில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.