×

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

 

ஈரோடு, பிப். 15: ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், கொடுமுடி போலீஸ் எஸ்ஐ தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, சீட்டு விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் கொடுமுடி இழுப்தோப்பு அண்ணா நகரை சேர்ந்த பார்த்தசாரதி (26), போலீஸ் ஸ்டேஷன் வீதியை சேர்ந்த மோகன்குமார் (27), சாலைப்புதூரை சேர்ந்த மாரிமுத்து (65), அண்ணா நகரை சோந்த பாபு (26), சுல்தான்பேட்டையை சேர்ந்த முகமது அர்பன் (25), திருப்பூர் மாவட்டம் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜோதிராஜ் (43), என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டு கட்டினையும், ரூ.6,970 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

The post பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Kodumudi ,Erode district ,Kodumudi Police SI ,Tamilselvi ,Dinakaran ,
× RELATED ஓட்டி பழகியபோது விபரீதம் 60 அடி...