ஈரோடு, பிப். 15: ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான விஜயமனோகரன், சரவணன், வீரா கார்த்திக், மதியழகன், ஆறுமுகம், வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், புதிய ஓய்வூதியத்திட்டங்களை ஆராயும் குழுவை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்திட வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதியர் உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேணுடும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
The post தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.